உக்ருள் மக்கள், விவசாயத்தை பிரதான தொழிலாக மேற்கொண்டுள்ளனர். எனவே அவர்களின் திருவிழாக்கள் பெரும்பாலும் அறுவடை, மற்றும் விதைப்பு நிகழ்ச்சிகளை மையமாக வைத்தே கொண்டாடப்படுகின்றன. டங்க்ஹுல் பழங்குடி மக்களால் கொண்டாடப்படும் பிரபலமான விழாக்களில் சில;
ஹும்பா: நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அறுவடைக்கு பின் கொண்டாடப்படும் ஹும்பா ஒரு நன்றி தெரிவிக்கும் திருவிழா ஆகும். இது தாய் விருந்து எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த விழாவின் போது ஆண்கள் இரவு முழுவதும் வெளியே தங்க வேண்டும். ஆகவே பெரும்பாலான சடங்குகள் பெண்களால் முன்னெடுக்கப்படுகின்றன.
லுய்ரா: விதைப்பு பருவத்தை குறிக்கும் இநத் லுய்ரா திருவிழா ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. லுய்ரா விழாவின் போது ஆடம்பறமான விருந்துகள் மற்றும் பானங்கள் பரிமாறப்படும். அப்பொழுது அங்கு ஆடப்படும் நடனங்கள் புகழ் பெற்றதாகும்.
லொங்கா காமாங்க்: இது கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் மற்றொரு அறுவடை திருவிழாவாகும். எனினும், லொங்கா காமாங்க் என்பது குழந்தைகளுக்காக கொண்டாடப்படும் விழாவாகவே அறியப்பட்டு வருகிறது. மொத்தத்தில் இது ஒரு குடும்ப விழாவாக கொண்டாடப்படுகிறது.
திஸாம்: இது இறந்தவர்களுக்காக கொண்டாடப்படும் ஒரு திருவிழா. இந்த திருவிழா ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. விழாக்களின் போது இறந்தவர்களுக்காக நடன நிகழ்சிகள் நடத்தப்படும்.



Click it and Unblock the Notifications