Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வதோதரா » ஈர்க்கும் இடங்கள் » அரண்மனைகள்

அரண்மனைகள், வதோதரா

48

1) லட்சுமி விலாஸ் மாளிகை

1890-ம் ஆண்டில் மஹாராஜா சயாஜிராவ் மேஜர் சார்லஸ் மாண்ட் அவர்களை நியமித்து கட்டத் துவங்கிய இந்த அரண்மனை . R.F.கிஸோல்மினால் கட்டி முடிக்கப்பட்டது, இந்தோ-சார்செனிக் பாரம்பரியத்தில் உருவாக்ப்பட்ட இந்த அரண்மனையில் இந்தியா, இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய வடிவமைப்புகளைக் காண முடியும். மொசைக் டைல்ஸ்கள், பல்வேறு வண்ணங்களாலான மார்பிள் கற்கள், எண்ணற்ற கலை வேலைப்பாடுகள், அற்புதமான நீரூற்றுகள் மற்றும் பார்வையை கொண்டிருக்கும் அரசவை ஆகியவை இந்த அரண்மனை கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாக வைத்துள்ளன.

அந்த நாட்களிலேயே எலிவேட்டர் போன்ற நவீன வசதிகளை கொண்டதாக இந்த அரண்மனை இருந்தது. இதன் தர்பார் ஹாலில் உள்ள பெல்லிஸியின் வெண்கல, மார்பிள் மற்றும் களிமண் சிற்ப சேகரிப்புகளும், வில்லியம் கோல்ட்ரிங்கினால் வடிவமைக்கப்பட்டுள்ள தோட்டங்களும் காண்பவரை மகிழ்விக்க காத்துக் கொண்டுள்ள காட்சிகளாகும்.

இந்த அரண்மனைக்கு உள்ளே இருக்கும் மோடி பாக் அரண்மனை மற்றும் மஹாராஜா பதே சிங் அருங்காட்சியகம் ஆகிய இடங்களும் காண வேண்டிய இடங்களாகும்.

மோடி பாக் அரண்மனைக்கு அருகில் மோடி பாக் கிரிக்கெட் மைதானத்தில், தேக்கினாலான தளத்தை கொண்டுள்ள டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் மைதானமும் உள்ளது.

இராஜா இரவி வர்மாவின் ஓவியங்களில் பெருமளவினை பெற்று அவற்றை மஹாராஜா பதே சிங் சிறப்புற உருவகப்படுத்தியுள்ளார். இந்த மியூசியத்தில் மார்பிள் மற்றும் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட ஜப்பானிய, சீன மற்றும் இத்தாலிய சிற்பங்களும் உள்ளன.

அண்டை நாடுகளிலிருந்து சீனா மற்றும் ஜப்பானிய சிற்பங்களை மஹாராஜாவும் மற்றும் இத்தாலிய சிற்பங்களை இத்தாலிய சிற்பக் கலைஞரான பெலிஸியும் இங்கே உருவாக்கியுள்ளனர். இந்த அரண்மனைக்கு பார்வையிடுவதற்கு மஹாராஜாவின் செயலரிடம் முன் அனுமதி பெற வெண்டும்.

2) நஸார்பாக் அரண்மனை

வெள்ளை சாந்தினால் உருவாக்கப்பட்ட நஸார்பாக் அரண்மனை அரச குடும்பத்தினரின் ஓய்விடமாக இருந்தது. தற்பொழுது இந்த இடம் அரச குடும்ப வாரிசுகளின் இடமாக உள்ளது.

1721-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அரண்மனைக்குள் தங்கம் மற்றும் வெள்ளியாலான துப்பாக்கிகள் உள்ளன. இந்த அரண்மனையில் 'ஸ்டார் ஆஃப் தி டைமண்ட் நெக்லஸ்' உட்பட கெய்க்வாட் குடும்பத்தினரின் பல்வேறு நகைகளும் வைக்கப்பட்டுள்ளன.விலை மதிப்பு மிக்க கற்களை எம்ப்ராய்டரி செய்துள்ள துணிகளும் மற்றும் முத்துக்களும் இந்த சேகரிப்புகளில் அடங்கும்.

3) மகர்பூரா அரண்மனை

1870-ம் ஆண்டில் மஹாராஜா கென்டே ராவினால் இத்தாலிய பாணியில் கட்டப்பட்டு, மூன்றாவது சயாஜிராவ் கெய்க்வாடினால் புனரமைக்கப்பட்ட இந்த இராஜ குடும்பபத்தின் கோடைகால அரண்மனை, தற்பொழுது இந்திய விமானப் படையினரின் பயிற்சிக்காக பயன்பட்டு வருகிறது.

இந்த அரண்மனைக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாவிட்டாலும், இந்த மூன்றடுக்கு மாளிகையின் பெருமையை வெளியிலிருந்து பார்ப்பது அதன் பெருமைய விளக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue