சயாஜி பாக்கில் உள்ள இரண்டு அருங்காட்சியகங்களில் ஒன்றாக வதோதரா அருங்காட்சியகம் உள்ளது. 1894-ம் ஆண்டில் மூன்றாம் சயாஜிராவ் மஹாராஜாவின் ஆதரவுடன் மேஜர்.
சார்லஸ் மாண்ட் மற்றும். R.F.கிஸோல்ம் ஆகியோரால் இந்த மியூசியம் கட்டப்பட்டது. இந்த மியூசியத்தில் முகலாய மினியேச்சர்--சிற்பங்கள், ஜவுளிகள் மற்றும் ஜப்பான், திபெத், நேபாளம் மற்றும் எகிப்திலிருந்து தருவிக்கப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதுமிருந்து சேகரிக்கப் பட்ட நாணயங்கள், பல்வேறு வகையான இசைக்கருவிகள், பல்வேறு ஐரோப்பிய கலைஞர்களின் ஓவியங்கள், மஹாராஜாவின் பிரத்யோகமான சேகரிப்புகள், நீலத் திமிங்கலத்தின் எலும்புக்கூடு, புவி அறிவியல் பற்றிய கருவிகள், இயற்கை வரலாறு மற்றும் விலங்கியல் பற்றிய பொருட்கள் ஆகியவை இந்த மியூசியத்தில் வைக்கப் பட்டுள்ளன.
குஜராத் மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்பை காட்டும் வகையில் பாடானின் ஷேக் பரித் கல்லறையின் கூரை, சம்பனேரின் கட்டிடக்கலை மற்றும் பானைகளின் மீதமுள்ள சிதைவுகள், ரோடா மற்றும் ஷாம்லாஜியின் சிற்பங்கள், அகோடாவின் சமண தீர்த்தங்கரர்களின் வெண்கல சிலைகள் ஆகியவை இந்த மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications