கணபதி கோவில் அல்லது சித்தி விநாயகர் கோவில் வால்ப்பாறையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இது ஜெயஸ்ரீ தேனீர் தொழிற்சாலையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மும்பையில் வழிபடப்படும் சித்தி விநாயகர் சிலைக்கு ஒப்பாகவே இங்குள்ள கணபதி சிலையும் இருக்கின்றது.
இந்த சிலை முழுவதும் ஒரே பளிங்குகல்லில் செதுக்கப்பட்டது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. கண்ணுக்கு தெரிந்த தூரம் வரை தேனீர் தோட்டங்களாக இருக்கும் இடத்திலே இக்கோவில் அமைக்கப்பட்டு இருக்கின்றது.
அமைதியான மலைகள் மற்றும் மரத்தோப்புகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த கோவிலின் அமைதியான சூழல் மிகவும் சோர்வடைந்த மனங்களுக்கு சாந்தி அளிக்கக் கூடியது.



Click it and Unblock the Notifications