Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வாரணாசி » ஈர்க்கும் இடங்கள் » தசாஸ்வமேத் படித்துறை

தசாஸ்வமேத் படித்துறை, வாரணாசி

60

வாரணாசியில் கங்கைக் கரையோரத்தில் அமைந்துள்ள படித்துறைகளுள் தசாஸ்வமேத் படித்துறை தான் மிகப் பழமையான, கம்பீரமான படித்துறையாகும். இதன் வரலாறு ஆயிரக்கணக்கான வருடங்களுக்குப் பிந்தையதாகும்.

தசாஸ்வமேத் என்பதற்கு பத்துக் குதிரைகளின் காவு என்று அர்த்தமாகும். புராணங்களின் படி பிரம்மதேவர் இங்கு ஒரு யக்ஞம் செய்து சிவபெருமானை அவரது அஞ்ஞாதவாசத்திலிருந்து திரும்பி அழைத்ததாகக் கூறப்படுகிறது.

பத்துக் குதிரைகள் யக்ஞத்தில் பிராயச்சித்தமாக காவு கொடுக்கப்பட்டனவா அல்லது சிவபெருமானின் வரவைக் கொண்டாட இவை பலியிடப்பட்டனவா என்பது பற்றிய தெளிவான குறிப்பு எதுவும் இல்லை. புராணங்களின் படி, இரண்டாவது நூற்றாண்டில் இதே போன்ற ஒரு பலி கொடுக்கும் வைபவம் பாரா ஷிவ நாகா ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்பட்டது.

தசாஸ்வமேத் படித்துறை அதன் வரலாற்றுச் சிறப்பினால் வாரணாசியின் முக்கிய படித்துறைகளுள் ஒன்றாக விளங்குகிறது. இது நகரில் உள்ள படித்துறைகளுள் மிகப் பெரியதாகவும், நிறையப் பேர் வந்து செல்லக்கூடியதாகவும், வழிபாட்டுக்குரியதாகவும் காணப்படுகிறது.

ஆரத்தி எனப்படும் தீப ஆராதனை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இங்கு அர்ச்சகர்களால் செய்யப்படுகின்றது. மாலை வேளைகளில் இங்கு பக்தர்கள், தேர்ந்த நடன அமைப்பில் நிகழ்த்தப்படும் வாணவேடிக்கையை நினைவுபடுத்தும் வகையில், சிறு தீபங்களை ஏற்றி வைத்து அவற்றை நீரில் விடும் கங்கா ஆரத்தி, யாரொருவரையும் மனோவசியம் செய்யக்கூடிய ஒரு காட்சியாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue