சர்க்கர தேவி கோயில் கேரளாவிலுள்ள முக்கிய புண்ணிய யாத்திரை ஸ்தலங்களின் ஒன்றாகும். இந்த கோயிலின் உட்பகுதி செவ்வக வடிவிலும், கூரை வெண்கலத்தால் வேயப்பட்டதாகவும் காணப்படுகிறது.
கோயிலின் இரண்டாவது அடுக்கில் கிருஷ்ணர், ராமர், துர்க்கா, கணபதி, விஷ்ணு, நரசிம்மமூர்த்தி மற்றும் ஏராளமான தெய்வங்களின் உருவங்கள் காணப்படுகின்றன. கலியூட் மற்றும் மீனாபரணி என்ற திருவிழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.
இந்த கோயிலின் பின்னணியில் கதை ஒன்றும் வழங்கி வருகிறது. அதாவது, நெடுநாட்களுக்கு முன்னர் இந்த கோயில் அமைந்திருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதியின் வழியாக பயணித்த வெல்லம் விற்கும் வியாபாரிகள் இங்குள்ள சாலையோர சத்திரத்தில் ஓய்வெடுப்பதற்காக தங்கியுள்ளனர்.
பின்னர் புறப்படுவதற்காக வெல்லப்பானைகளை எடுத்தபோது அவற்றில் ஒன்றை நகர்த்தவே முடியவில்லை. வலுவுடன் அதை தூக்க முயற்சித்தபோது பானை உடைந்து வெல்லம் கரைந்து ஓடியதோடு பானையின் உள்ளேயிருந்து ஒரு விக்கிரகமும் வெளிப்பட்டுள்ளது.
இந்த விக்கிரகத்தை கண்ட ஒரு முதியவள் இங்குள்ள கிராமத்தாரிடம் சொல்ல அவர்கள் இப்பகுதியிலேயே ஒரு கோயிலை கட்டி அந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர். வெல்லச்சர்க்கரையிலிருந்து வெளிப்பட்ட தெய்வம் என்பதால் சர்க்கரை தேவி என்று இத்தெய்வத்தை மக்கள் வழிபடலாயினர்.
கலியூட் மற்றும் மீனாபரணி என்ற இரண்டு திருவிழாக்கள் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.



Click it and Unblock the Notifications