விராட் நகருக்கு வெகு அருகிலேயே ஜெய்ப்பூரின் சங்கனேர் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்துக்கு மும்பை, டெல்லி, ஜோத்பூர், உதைப்பூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே இந்த விமான நிலையத்தை அடைந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக விராட் நகரை அடைந்து விட முடியும். மேலும் வெளிநாட்டு பயணிகள் டெல்லி விமான நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு எந்த சிரமமுமின்றி வந்து சேரலாம்.