கோவிந்த் தேவ் கோயில் கிருஷ்ணருக்காக அமைக்கப்பட்டிருக்கும் கம்பீரமான கோயிலாகும். விருந்தாவன் நகரத்தில் தனது இளமைப்பருவத்தை கிருஷ்ணர் கழித்துள்ளதால் ஏராளமான கிருஷ்னர் கோயில்கள் இந்நகரத்தில் உருவாகியிருக்கின்றன.
7 வருடங்களில் ஏராளமான கலைஞர்களின் உழைப்பில் இந்த அழகிய கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சலவைக்கல்லால் ஆன பூஜைப்பீடம் மற்றும் தாமரை இதழ் வடிவிலான உட்கூரை போன்றவை இதன் முக்கியமான அலங்காரக்கலையம்சங்களாகும்.
இக்கோயிலின் பெரும்பகுதி ஔரங்கசீப் மன்னர் காலத்தில் சிதைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இதன் புராதன மெருகு குலையாமல் இன்றும் காட்சியளிக்கிறது.
உலகம் முழுவதிலிருந்தும் யாத்ரீகர்கள் இந்த கோயிலை தரிசிப்பதற்காக விஜயம் செய்கின்றனர். ஜன்மாஷ்டமி மற்றும் ஹோலிப்பண்டிகை காலங்களில் இக்கோயில் மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது.



Click it and Unblock the Notifications