விருந்தாவன் நகரத்தில் காளி காட் எனும் ஆற்றுத்துறைக்கு அருகே இந்த மதன் மோகன் கோயில் அமைந்திருக்கிறது. இது இப்பகுதியிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும். பழங்காலத்தில் இந்த கோயில் அமைந்திருக்கும் இடம் ஒரு வனமாகவே இருந்திருக்கிறது.
இந்த கோயிலில் இருந்த ஆதி மதனகோபாலர் சிலை இப்போது இல்லை. ஔரங்கசீப் மன்னர் காலத்தில் அது அழிக்கப்படாமல் இருப்பதற்காக ராஜஸ்தானுக்கு எடுத்துச்செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
முகாலயர் காலத்தில் இது போன்ற கோயில்கள் பல சிதைக்கப்பட்டதாக தெரியவருகிறது. இன்று இக்கோயிலில் முன்பிருந்த மதன கோபாலர் சிலையின் பிரதி வடிவம் அமைக்கப்பட்டிருக்கிறது. நிஜ சிலை ராஜஸ்தானில் கரௌலி எனும் இடத்தில் இன்றும் உள்ளது.
இந்த கோயில் மற்ற புராதனக்கோயில்களை விட அளவில் சிறியதாக இருந்தாலும் நுணுக்கமான அலங்கார வடிப்புகளுடன் காட்சியளிக்கிறது.
உயரமாகவும் குறுகலாகவும் காணப்படும் இந்த கோயில் 19 ம் நூற்றாண்டில் ஷீ நந்தலால் வாசு என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலின் ஆதி வடிவம் முகலாயர் காலத்தில் சிதைக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications