சேவா குஞ்ச் மற்றும் நிதிவனம் எனப்படும் இந்த ரம்மியமான பூங்காத்தோட்டங்கள் கிருஷ்ணரது காலத்திலிருந்து இந்த இடத்தில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சேவா குஞ்ச் நந்தவனத்தில்தான் ராதை மற்றும் கோபியரோடு கிருஷ்ணர் ராசலீலைகளில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
நுணுக்கமான அலங்கார கலையம்சங்கள் நிரம்பிய கோயில் ஒன்றும் இந்த நந்தவனத்தில் அமைந்துள்ளது. இது கிருஷ்ணர் மற்றும் ராதைக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. நிதிவன் எனும் நந்தவனம் கிருஷ்ணரும் ராதையும் ஓய்வெடுத்த இடமாகவும் சொல்லப்படுகிறது.
பெரும்பாலான யாத்ரீகர்கள் இந்த பூங்காவுக்கு மாலை நேரத்தில் விஜயம் செய்வதை விரும்புகின்றனர். கிருஷ்ணரும் ராதையும் இருட்டியபின்பே இங்கு ராசலீலைகளில் ஈடுபட்டனர் என்ற புராணக்கதையே இதற்குக்காரணம். இந்த நந்தவனங்களுக்கு வெளியே சில கோயில்களும் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications