திருநெல்லி கோயில் வயநாடு பகுதியில் பிரம்மகிரி மலைக்கு அருகில் அமைந்துள்ளது. விஷ்ணு பஹவானுக்கான பழமையான கோயில்களில் ஒன்றாக இது பிரசித்தி பெற்றுள்ளது. வயநாடு பகுதியிலிருந்து 900 மீட்டர் தூரத்திலேயே உள்ள எழில் நிறைந்த சூழலில் இக்கோயில் அமைந்துள்ளது.
இதன் இருப்பிட முக்கியத்துவத்தின் காரணமாக ஹிந்துக்கள் மத்தியில் இது முக்கியமான ஆன்மீக யாத்திரை ஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது. நாலா புறமும் மலைகள் வீற்றிருக்க ஒரு பள்ளத்தாக்கு பகுதியில் இந்த கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கோயிலை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி காணப்படுவதால் கோயிலை சென்றடைவது சற்றே மலைக்க வைக்கும் கடின பயணமாகத்தான் இருக்கும்.
இந்த கோயில் எப்போது கட்டப்பட்டது என்பது குறித்த பதிவுகள் ஏதும் இல்லை. எனினும் இது மிகப்புராதனமான பழமை வாய்ந்தது எனும் கருத்துகள் நிலவுகின்றன. 962 – 1019ம் ஆண்டிலேயே இக்கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அக்காலத்திலேயே தென்னிந்தியா முழுக்க பக்தர்கள் மத்தியில் பூஜிக்கப்பட்ட ஒரு கோயில் ஸ்தலமாக இது விளங்கியுள்ளது.
கடந்து போன நூற்றாண்டுகளின் ஊடாக நீண்ட காலம் பயணித்து இன்றும் நம் மத்தியில் வீற்றிருக்கும் இந்தக் கோயிலின் தரிசனம் நம் உணர்வுகளை தீண்டி சிலிர்க்க வைக்கிறது.



Click it and Unblock the Notifications