Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மேற்கு கரோ ஹில்ஸ் » ஈர்க்கும் இடங்கள் » அர்பெல்லா பீக்

அர்பெல்லா பீக், மேற்கு கரோ ஹில்ஸ்

33

கடல் மட்டத்திலிருந்து 999 மீ தூரத்தில் இந்த அர்பெல்லா சிகரம் வீற்றிருக்கிறது. இந்த சிகரம் அமைந்திருக்கும் மலைதொடரும் அர்பெல்லா மலைத்தொடர் என்றே அழைக்கப்படுகிறது. குவஹாட்டி-துரா நெடுஞ்சாலையில் அசனன் கிரே எனும் கிராமப்பகுதியில் இந்த மலைச்சிகரம் அமைந்துள்ளது.

வித்தியாசமான தாவரங்கள் மற்றும் காட்டு வளத்துக்கு பெயர் போன கரோ ஹில்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் இந்த அர்பெல்லா இயற்க வளங்களால் நிரம்பி வழிகிறது. பலவகையான ஆர்க்கிட் தாவரங்கள் மற்றும் மலர்ச்செடிகளை இங்கு பார்க்கலாம். பறவைகளும் இங்கு அதிகம் வசிக்கின்றன.

அடர்ந்த கானகப்பாதையின் வழியாக இந்த மலையுச்சிக்கு செல்லும் பயணம் சாகச அனுபவமாகவே அமைந்துள்ளது.  உச்சியை அடைந்தபின் சுற்றிலும் உள்ள மலைத்தொடர்களை கண்டு ரசிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.

மடிந்து மடிந்து நீண்டு செல்லும் மலைத்தொடர்கள் தூரத்தே தொடுவானம் வரையிலும் நீல நிற ஜொலிப்புடன் நீண்டு செல்லும் காட்சி மனம் மயங்க வைக்கும் ஒன்று.  

ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்த மலையுச்சியில் ஒரு ஓய்வு இல்லம் கட்டப்பட்டது. இது இன்று பார்வையாளர்கள் ஓய்வு எடுப்பதற்கு உதவுகிறது. சாகச அனுபவத்தை விரும்பவர்கள் 40 கி.மீ நீளமுள்ள மலையேற்றப்பாதையின் வழியே இந்த சிகரத்தில் ஏறலாம்.

குவஹாத்தி, ஷில்லாங் மற்றும் வில்லியம் நகர்(கரோ ஹில்ஸ்) போன்ற இடங்களிலிருந்து இந்த மலைச்சிகரத்துக்கு பேருந்து வசதிகள் உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed