Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மேற்கு கரோ ஹில்ஸ் » ஈர்க்கும் இடங்கள் » அசனன் கிரே

அசனன் கிரே, மேற்கு கரோ ஹில்ஸ்

33

அசனன் கிரே எனும் இந்த கரோ இன பழங்குடி கிராமம் வில்லியம்நகர்-துரா நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கரோ ஹில்ஸ் பகுதியிலுள்ள மிகப்பெரிய கிராமம் இது.

அது மட்டுமல்லாமல் ரொன்கிராம் இனத்தார் வசிக்கும் கிராமமாகவும் கிராமிய வளர்ச்சி அலுவலகத்தின் தலைமை நிலையம் இயங்கும் இடமாகவும் இந்த கிராமம் விளங்குகிறது.

கரோ இன மக்களின் கிராமம் மற்றும் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ள உதவும் மாதிரி கிராமாகவே இந்த அசனன் கிரே காட்சியளிக்கிறது.

எளிமையான கூரை வீடுகள், குறைந்தபட்ச வீட்டு உபயோகப்பொருட்கள் என்று இம்மக்களின் மிக எளிமையான வாழ்க்கை முறையை இந்த கிராமப்பகுதியின் குடியிருப்புகளிலிருந்து புரிந்து கொள்ளலாம். மீன்கள் வளர்க்கப்படும் குளங்கள் மற்றும் பழத்தோப்புகள், காய்கறித்தோட்டங்கள் போன்றவற்றையும் இங்கு பார்க்கலாம்.

வங்காலா நடனத்திருவிழா எனும் முக்கியமான கலாச்சார நிகழ்ச்சி நடத்தப்படும் ஸ்தலமாகவும் இந்த கிராமம் விளங்குகிறது. இந்த திருவிழா மேகாலயா மாநிலம் முழுதுமே கொண்டாடப்படுவதோடு மாநில அரசு விடுமுறை நாளாகவும் உள்ளது.

மேலும் இக்கிராமத்தில் ‘பார்டர் ஹாட்ஸ்’ எனப்படும் எல்லைப்புற சந்தைகளும் இந்திய-பங்களாதேஷ் வியாபார பரிமாற்றங்களுக்காக நடத்தப்படுகின்றன.

ஷில்லாங் நகரத்திலிருந்து தனியார் வாகனங்கள் அல்லது அரசுப்பேருந்துகள் மூலம் இந்த அசனன் கிரே கிராமத்துக்கு வரலாம். பேருந்துகளில் பயணித்தால் வில்லியம் நகர் – துரா ஹைவே சந்திப்பில் இறங்க வெண்டும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue