மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் பஜார்கள் உள்ளூர் சுவாரசிய அம்சங்களுடன் நிரம்பி வழிகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கடைத்தெருக்களுக்கு விஜயம் செய்வது நிச்சயம் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.
கைத்தறி துணிவகைகள், உள்ளூர் கைவினைப்பொருட்கள், காய்கறிகள் மற்றும் கரோ இனத்து உணவுப்பண்டங்கள் போன்றவற்றை இந்த கடைத்தெருக்களில் வாங்கலாம்.
கரோ இன மக்கள் சந்தை பொருளாதாரத்தை சார்ந்திருப்பதால் அவர்கள் தங்கள் வயல்களில் விளைந்த பொருட்களை வெகு தூரத்திலிருந்து கொண்டு வந்து இந்த கடைத்தெருக்களில் விற்று பதிலுக்கு அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி செல்கின்றனர்.
செவ்வாய்கிழமைகளில் நடத்தப்படும் கரோபதா பஜார் (சந்தை), வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் ரோன்கிராம் பஜார், வியாழக்கிழமைகளில் நடத்தப்படும் ஜெங்ஜால் பஜார், சனிக்கிழமைகளில் கூடும் நாஜிங் பஜார், புதன்கிழமைகளில் கேராபரா பஜார், செவ்வாய்கிழமைகளில் ரொங்சாக் பஜார் மற்றும் திங்கள் கிழமைகளில் படாடம் பஜார் போன்றவை இப்பகுதியில் வெகு பிரசித்தம். துரா நகரத்திலிருந்து தனியார் வாகனங்கள் மூலம் இந்த சந்தைகளுக்கு விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications