பைத்பரி எனும் இந்த அழகிய சிறு கிராமம் ஜிங்ஜிராம் பகுதியில் மேற்கு கரோ மலை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. 1991-92ம் வருடங்களில் இங்கு நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளுக்கு பின் இந்த ஸ்தலம் பிரபல்யமடைந்துள்ளது. இங்கு சில முக்கியமான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
செங்கல் மற்றும் மண் சாந்து பயன்படுத்து கட்டப்பட்ட கோட்டை அமைப்பு ஒன்று குதிரை லாட வடிவத்தில் இந்த ஸ்தலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஜிங்ஜிராம் ஆற்றை ஒட்டி வடக்கு தெற்காக் 5 கி.மீ நீளத்திற்கு இந்த அமைப்பு காணப்படுகிறது. இதே இடத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு கோயில் ஒன்றும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மூன்றவதாக, எட்டு குறுவடிவ சிவலிங்கங்களுடன் அமைந்திருக்கும் எண்கோண வடிவிலான ஒரு கோயில் வளாகத்தையும் இந்த அகழ்வாராய்ச்சி ஸ்தலத்தில் காணலாம்.
நான்காவது விசேஷமான அம்சமாக ஒரு புத்த ஸ்தூபி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த கண்டுபிடிப்புகளின் வரலாற்றுப்பின்னணி மற்றும் இதர தகவல்கள் குறித்த ஆய்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை.
துரா நகரத்திற்கு செல்லும் வழியில் உள்ள புல்பரி எனும் இடத்திலிருந்து 3 மைல் தொலைவில் இந்த பைத்பரி அகழ்வாராய்ச்சி ஸ்தலம் அமைந்துள்ளது. துரா நகரத்திலிருந்து உள்ளூர் வாகனங்கள் மூலம் இங்கு வரலாம்.



Click it and Unblock the Notifications