தூண்டில் மீன் பிடிப்பு மற்றும் பிக்னிக் பொழுதுபோக்கு போன்றவற்றில் ஆர்வம் உள்ள பயணிகளுக்கு இந்த பெல்கா நீர்வீழ்ச்சி ஸ்தலம் மிகவும் பிடித்தமான ஒன்றாக அமைந்துள்ளது.
அமைதியும் நிசப்தமும் சூழ்ந்த இடமாக இந்த பெல்கா நீர்வீழ்ச்சி ஸ்தலம் காணப்படுவதால் இயற்கை ரசிகர்களுக்கு இது ஒரு சொர்க்கபுரி போல் தோற்றமளிப்பதில் ஆச்சரியமில்லை.
மாநில அரசின் சுற்றுலாத்துறை நிர்வாக இந்த பெல்கா நீர்வீழ்ச்சி வரை பயணிகள் செல்ல உதவியாக ஒரு நடைபாதையை கட்டுவித்துள்ளது. நீர்வீழ்ச்சியை அடைந்தவுடன் இந்த இடத்தின் அழகை மிக நன்றாக பார்த்து ரசிக்க முடியும்.
பரபரப்பும் மன அழுத்தமும் நிறைந்த அன்றாட வாழ்க்கையிலிருந்து சற்றே விலகி ஓய்வெடுக்க இது மிகவும் ஏற்ற இடம். முழுக்க மூங்கிலால் கட்டப்பட்ட ஒரு பாலத்தையும் இங்கு பார்க்கலாம்.
இது கனோல் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கிறது. பெல்கா நீர்வீழ்ச்சிக்கு அருகே சுவையான உள்ளூர் தின்பண்டங்களை விற்கும் கடைகளும் நிரம்பியுள்ளன. துரா நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள இந்த பெல்கா நீர்வீழ்ச்சிக்கு துரா நகரத்திலிருந்து வாடகை டாக்சிகள் மூலம் வரலாம்.



Click it and Unblock the Notifications