ரோங்பாங் டரே எனும் இந்த அழகிய நீர்வீழ்ச்சி சினாபத் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது துரா-அசனன் கிரே – வில்லியம்நகர் மாநில நெடுஞ்சாலைக்கு வலப்புறம் அமைந்துள்ளது.
மழைக்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி வெண்ணிற நுரையுடன் பொங்கி பிரவகிக்கும் நீருடன் ரம்மியமாக காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் உயரமான மூங்கில் மரக்காடுகள் சூழ்ந்துள்ளன. அளவில் சிறியதாக இருந்தாலும் இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய ஒன்றாக இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக பயணியர் இல்லங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவை இந்த நீர்வீழ்ச்சி ஸ்தலத்துக்கருகே உள்ள துரா நகரத்தில் அமைந்துள்ளன. துரா நகரத்திலிருந்து உள்ளூர் வாகனங்கள் மூலம் இந்த ரோங்பாங் டரே நீர்விழ்ச்சியை வந்தடையலாம்.



Click it and Unblock the Notifications