மேகாலயா மாநிலத்தில் உள்ள மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் நோக்ரெக் சிகரத்திற்கு அருகில் இந்த சஸாத் கிரே கிராமம் அமைந்துள்ளது. கரோ இனத்தாரின் பாரம்பரிய பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் குடியிருப்புகளை இந்த கிராமத்தில் பார்க்கலாம். உறுதியான இந்த வீடுகள் காற்றோட்ட வசதியுடன் விசாலமாக கட்டப்பட்டிருக்கின்றன.
இந்த கிராமத்திற்கு வருகை தரும் பார்வையாளர்கள் கரோ பழங்குடி இன மக்களின் கலாச்சாரம் குறித்த பல அம்சங்களை புரிந்து கொள்ளலாம். இன்றும் தங்களது மரபு சார்ந்த பாரம்பரிய வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்ளாமல் இந்த கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
சஸாத்கிரே கிராமம் இங்கு விளையும் ஆரஞ்சு பழங்களுக்காகவும் பெயர் பெற்றுள்ளது. இப்பகுதியில் ஆரஞ்சு பழத்தோட்டங்கள் அதிகமாக காணப்படுகின்றன.
ஒட்டுமொத்த கிராமம் முழுதுமே பசுமையான ஆரஞ்சு மரங்களால் சூழப்பட்டிருப்பது கண்களை கவரும் அழகம்சமாகும். இங்கு கிடைக்கும் ஆரஞ்சுப்பழங்கள் தனிச்சுவையை கொண்டிருப்பதால் பயணிகளிடையே வெகு பிரசித்தமாக அறியப்படுகிறது.
இந்த கிராமம் நோக்ரெக் தேசிய இயற்கை பூங்கா வளாகத்தை ஒட்டியே காணப்படுகிறது. துரா-வில்லியம்நகர் சாலைக்கருகே உள்ள ஒராகிடோக் எனும் கிராமத்திலிருந்து சாதாரண மண்சாலை வழியாக இந்த சஸாத்கிரே கிராமத்திற்கு வரலாம்.



Click it and Unblock the Notifications