Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மேற்கு கரோ ஹில்ஸ் » ஈர்க்கும் இடங்கள் » மலை ஏற்றம்

மலை ஏற்றம், மேற்கு கரோ ஹில்ஸ்

33

கரோ ஹில்ஸ் பகுதிக்கு விஜயம் செய்யும் பயணிகள் மத்தியில் மலைஏற்றம் எனப்படும் சாகச பொழுதுபோக்கு அம்சம் பிரபலமாக உள்ளது. இந்த மலையேற்ற பயணங்கள் மாநில அரசின் சுற்றுலாத்துறை மூலம் ஏற்பாடு செய்து தரப்படுகின்றன.

இப்பகுதியில் மிக நீண்ட மலையேற்றப்பாதை துரா சிகரத்திலிருந்து சகால் கிரே வரை சென்று பின்னர் துரா கலாக் கிரே கிராம வீட்டில் இரவுத்தங்கலுடன் முடிகிறது.

பின்னர் மறுநாள் இந்த பயணம் தரிபோக் கிரே நோக் அசிக் வரை சென்று அடுத்ததாக நோக்ரக் பயோஸ்பியர் வனப்பகுதியை விஜயம் செய்தபின் மீண்டும் தரிபோக் கிரே கிராமத்தில் இரவுத்தங்கலில் முடிகிறது.

அடுத்த நாள் இந்த மலையேற்ற பயணம் ஒரகிட்டோ, சண்டி கிரே மற்றும் அரபெல்லா மலைகள் வழியே தொடர்கிறது. அதற்கும் அடுத்த நாளில் வரிபோக் கிரே சென்று சொங்கல்வார் மீன்கள் சரணாலயத்திற்கு விஜயம் செய்தபின் ரொன்கிராம் கிராமத்தில் முடிகிறது.

கடைசி நாளாக பபதாம் எனும் இடத்தை நோக்கி செல்லும் இந்த பயணம் தொகிட்கிரே எனும் பழங்குடி கிராமத்தை விஜயம் செய்தபின்னர் டொரேங் கிரே, டொபனங் கிரே மற்றும் அசிப்ரா கிராமங்கள் வழியே முடிவடைகிறது.

இந்த மலையேற்றப்பயணம் 5 நாட்களை உள்ளடக்கிய மலையேற்ற சுற்றுலாவாகும். இதைவிட குறுகலான மலையேற்ற பயண திட்டங்களும் இப்பகுதியில் ஏற்பாடு செய்து தரப்படுகின்றன. துரா நகரத்தில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் இது தொடர்பான தகவல்களை பெறலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 May,Sat
Check Out
31 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun