Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » யமுனா நகர் » ஈர்க்கும் இடங்கள் » கலெஸர் வனவிலங்கு சரணாலயம்

கலெஸர் வனவிலங்கு சரணாலயம், யமுனா நகர்

6

கிழக்கு ஹரியானாவில் அமைந்துள்ள இந்த வன விலங்கு சரணாலயம் சண்டிகரில் இருந்து சுமார் 126 கி.மீ.  தொலைவில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட இந்த பகுதி மிகப் பிரபலமான கலெஸர் தேசிய பூங்கா என அழைக்கப்படுகிறது.

டிசம்பர் 2003 இல் இந்திய அரசாங்கம் இந்த வனப் பகுதியை ஒரு தேசிய பூங்காவாக அறிவித்தது. அடிப்படையில் ஒரு சால் காடான இந்த தேசிய பூங்கா இமயமலை அடிவாரத்தில் உள்ள ஷிவாலிக் ஹில்ஸை சேர்ந்தது. 

சுமார் 11000 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த கலெஸர் தேசிய பூங்காவின் உயரம் 2000 அடியில்  இருந்து 3,500 அடி வரை மாறுபடுகிறது.

கலெஸர் தேசிய பூங்காவானது பல்வேறு வகையான பறவைகள் மற்றும் விலங்குகளின் இருப்பிடமாக உள்ளதால், இங்கு வரும் இயற்கை ஆர்வலர்களான சுற்றுலா பயணிகளூக்கு ஒரு உன்னத அனுபவத்தை வழங்குகிறது.

இங்கு காட்டு பன்றிகள், சம்பார், முயல்கள், சிகப்பு காட்டுக்கோழி, முள்ளம்பன்றி, ச்ஹிதால் போன்ற வன விலங்குகள் காணப்படுகின்றன. இங்கு வன விலங்குகளைத் தவிர க்ஹரி, சால், ஸ்ஹிஸ்ஹம், ஸைன், ஜ்ஹின்கான் போன்ற தாவரங்கள் மற்றும் மரங்கள் காணப்படுகின்றன. இந்த தேசியப் பூங்கா சிந்தூர் மரங்களுக்கு மிகப் பிரபலமானது.

இந்தப் பூங்காவானது அதன் செழுமையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை தவிர்த்து, இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கண்ணுக்கினிய இயற்கை காட்சிகளை விருந்தாக வழங்குகிறது.

இந்தப் பூங்கா வளாகத்தில் பிரிட்டிஷ் காலனி காலத்தை சேர்ந்த சுமார் 100 ஆண்டுகள் பழமையான பங்களா ஒன்று உள்ளது. பார்வையாளர்கள் இந்த தேசிய பூங்காவில் உள்ள வன விருந்தினர் வீட்டில் இருந்து யமுனா நதியின் அழகிய பார்வையை பெற முடியும்.

இந்த பங்களா அழகான தோட்டங்கள் மத்தியில் உள்ளது. மேலும் இந்த பங்களாவானது உயர்ந்த கூரை, தேக்கு மரப் பலகைகளால் செதுக்கப்பட்ட மர வேலைப்பாடுகள்,  மற்றும் அழகு வேலைப்பாடு அமைந்த தரை விரிப்புகளையும் பெற்றுள்ளது. இதைத் தவிர இங்கு ஒரு வசதியான நெருப்பிடம் மற்றும் பழங்கால மேஜை மற்றும் நாற்காலிகளையும் காணலாம்.

இந்த கலெஸர் தேசிய பூங்காவின் வெவ்வேறு பகுதிகளி எட்டு தண்ணீர் தொட்டிகள் உள்ளன. இந்த தண்ணீர் தொட்டிகள், இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகள் தண்ணீர் தேடி வெளியேறிவிடாமல் பாதுகாக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed