யானா வரும் சுற்றுலா பயணிகள் அதன் குகைகளை கண்டிப்பாக மறக்க மாட்டார்கள். இந்த 3 மீட்டர் ஆழமுள்ள குகைகள், ஆண்டின் எல்லா பருவங்களிலும் பசுமையாகவே காட்சியளிக்கும் கர்நாடகாவின் சஹயாத்ரி மலைப் பகுதிகளில் அமைத்திருக்கிறது.
இதன் தனித்துவமான கருஞ்சுண்ணாம்பு பாறைகளில் ஏறிச் செல்லும் அனுபவத்தை சாகசப் பிரியர்கள் வெகுவாக விரும்புவார்கள். இக்குகைகளின் வாயிலில் இருக்கும் சிவலிங்கம் கங்கோத்பவா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இங்கு உள்ள தொன்மையான கொயிலுக்காகவும், பாறை வடிவங்களுக்காகவும், நீர்வீழ்ச்சிகளுக்காகவுமே யானாவின் குகைகள் பயணிகளிடையே பிரத்தியேகமாக அறியப்படுகிறது. மேலும், துர்காவின் அவதாரமாக கருதப்படும் சந்திகா தேவியின் வெங்கல சிலை ஒன்றையும் பயணிகள் இங்கு காணலாம்.
யானாவின் பாறைகளை கடந்து செல்லும் தண்ணீரிலிருந்து சந்திஹோல் என்ற சிறிய நதி உருவாகி, அது பின்பு உப்பினப்பட்டனத்தில் ஓடும் ஆஹனாசினி ஆற்றுடன் கலக்கிறது.



Click it and Unblock the Notifications