இந்த பைன்கங்கா காட்டுயிர் சரணாலயத்தின் மூன்று புறமும் பைன்கங்கா ஆறு சூழ்ந்திருப்பதால் அந்த ஆற்றின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இது யாவத்மால் நகரில் உமர்கேத் தேசில் வட்டத்தில் அமைந்துள்ளது.தோராயமாக 325 ச.கி.மீ பரப்பளவில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான தாவர வகைகளும் உயிரினங்களும் நிறைந்துள்ளன. தாவர வகைகளில் இங்கு உலர் தேக்கு மரக்காடுகள் மற்றும் தெற்குப்பிரதேச கலவையான இலையுதிர்காடுகள் காணப்படுகின்றன.
உயிரினங்களில் சிங்காரா மான், பிளாக் பக் மான், சாம்பார் மான், நான்கு கொம்பு கலை மான், குள்ள நரி, முயல், நரி, சிறுத்தை போன்றவை இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன.
இவை தவிர பலவகை பறவை வகைகளையும் பறவை ரசிகர்கள் இங்கு காணலாம். பருந்து, குக்கூ, மீன்கொத்தி, புறா, புல்புல், கழுகு போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.ஜனவரியிலிருந்து ஜூன் வரை உள்ள காலம் இந்த சரணாலயத்தை சுற்றிப்பார்க்க ஏற்ற காலமாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications