திபேஷ்வர் காட்டுயிர் சரணாலயம் 148 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. இது யாவத்மால் மாவட்டத்தில் பந்தகவாடா தாலுக்காவில் அமைந்துள்ளது.
இந்த சரணாலயத்தில் தெற்குப்பிரதேச வறண்ட ஈரக்காடுகளும் மலைப்பாங்கான பசுமைச்சமவெளிப்பகுதிகளும் புதர்க்காடுகளும் காணப்படுகின்றன. அயோலா, அயின் மற்றும் தேக்கு மரங்கள் இங்குள்ள மரங்களில் குறிப்பிடத்தக்கவை.
கறுப்புமான், புள்ளிமான், குரங்கு, சாம்பார் மான், முயல் போன்றவை இந்த சரணாலயத்தில் வசிக்கும் சில குறிப்பிடத்தக்க விலங்குகளாகும்.கோடைக்காலம் இந்த சரணாலயத்திற்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாகும். யாவத்மால் ரயில் நிலையம் வழியாக இந்த சரணாலயத்தை சுலபமாக சென்றடையலாம்.



Click it and Unblock the Notifications