இயற்கையிலேயே மிகவும் அழகு மிகுந்த பகுதியாக யும்தாங் விளங்கி வருகிறது. எனினும் இங்கு பூக்கும் ரோடோடென்ரோன் மலர்கள் இந்த பகுதிக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பூத்துக் குலுங்கும் இந்த மலர்கள், தங்கள் அழகினால் யும்தாங் பகுதியையே சொர்க்கமாக மாற்றிவிடுகின்றன.
மேலும் யும்தாங்கிலிருக்கும் ஷின்பா ரோடோடென்ட்ரோன் மலர் பூங்கா 24 வகையான ரோடோடென்ட்ரோன் மலர்களைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இயற்கை அழகை ரசிக்கும் இயற்கை விரும்பிகளுக்கு இந்த பூங்கா தனது அளவற்ற இயற்கை அழகினால் மிக இனிமையான இயற்கை விருந்தைப் படைக்கும் என்பதில் ஐயமில்லை.



Click it and Unblock the Notifications