Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஹமதாபாத் » ஈர்க்கும் இடங்கள் » மஹுதி தீர்த்

மஹுதி தீர்த், அஹமதாபாத்

105

இந்த மஹுதி தீர்த் எனும் ஆலயம் ஜைன இனத்தார் மத்தியில் ஒரு புனிதமான ஆன்மீகஸ்தலமாக பிரசித்தி பெற்று விளங்குகிறது. புராதன காலத்தில் இந்த இடம் மதுமதி என்ற பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது. 2000 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்த சில அகழ்வுச்சான்றுகள் இந்த தகவலை நிரூபித்துள்ளன.

ஆச்சார்யதேவ் புத்தி சாகர்சூரிஸ்வர்ஜி எனும் ஜைன யோகி நீண்ட காலம் தவத்தில் ஈடுபட்ட பின்னர் இந்த கோயிலை உருவாக்கியுள்ளார். கண்டகர்ண மஹாவீர் தேவ் எனும் ஜைன அவதாரத்தின் சிலை இந்த கோயிலில் வைக்கப்பட்டிருக்கிறது.

அவர் தனது முந்தைய அவதாரமான துங்கபத்ரா எனும் அரச உருவத்தில், கையில் வில் அம்போடு இங்கு காட்சியளிக்கின்றார். வேற்று மதங்கள் மற்றும் பிரிவுகளை சார்ந்தோரும்கூட இந்த கோயில் சிலைக்கு வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றும் சக்தி உள்ளதாக நம்பி வழிபடுகின்றனர்.‘சுகதி’ எனும் உணவுப்பொருளை இந்த சிலைக்கு நைவேத்தியமாக அளித்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

கோயிலுக்கு அருகிலேயே 30 அடி உயர ஆலயமணி ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பில் ஏறி மணியடித்து பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றனர்.

பிரதான கோயிலுக்கு அருகில் சலவைக்கல்லால் ஆன 22 அங்குல பஹவான் பத்மப்பிரபுவின் சிலை ஒன்றும் ஆச்சார்யதேவ் புத்தி சாகர்சூரிஸ்வர்ஜியால் அமைக்கப்பட்டிருக்கிறது. 24 தீர்த்தங்கரர்களின் சன்னதிகளை வலம் வந்து வழிபடுவதை பக்தர்கள் ஒரு முக்கிய சடங்காக நிறைவேற்றுகின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue