பரா பஜார் எனும் இந்த பிரசித்தமான மார்க்கெட் பகுதி அய்சால் நகரத்தின் முக்கியமான ஷாப்பிங் மார்க்கெட்டாக அமைந்துள்ளது. நகரத்தின் மிக முக்கியமான மையக்கேந்திரமாக இந்த மார்க்கெட் இயங்குகிறது.
குறுகலான சாலைகளை கொண்டுள்ள இந்த மார்க்கெட் பகுதியில் இருபுறமும் சிறு கடைகள் ஏராளமாக காணப்படுகின்றன. இவற்றில் பாரம்பரிய உடைகள், கைவினைப்பொருட்கள், உணவுப்பொருட்கள், தானிய வகைகள் மற்றும் பலவகையான பொருட்கள் விற்கப்படுகின்றன.
பரபரப்பான இந்த மார்க்கெட்டின் ஒரு பகுதியில் ஆடைகள் மற்றும் அழகுப்பொருட்கள் போன்ற நாகரிகப்பொருட்களும் மறுபுறத்தின் மீன், இறைச்சி போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விற்கப்படுவதையும் பார்க்கலாம்.
இங்கு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள உள்ளூர் மக்கள் யாவருமே பாரம்பரிய மிசோ உடைகளை அணிந்தவர்களாக காட்சியளிக்கின்றனர். அய்சால் நகரத்தின் கலாச்சார அடையாளங்களை இந்த மார்க்கெட் பகுதியில் பயணிகளால் நன்கு புரிந்து கொள்ள முடியும்.
அய்சால் நகரத்தின் மையப்பகுதியில் இந்த பரா பஜார் அமைந்துள்ளது. உள்ளூர் டாக்சிகள் மூலம் பயணிகள் இந்த மார்க்கெட்டிற்கு வரலாம்.



Click it and Unblock the Notifications