Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அய்சால் » ஈர்க்கும் இடங்கள் » தம்பா காட்டுயிர் சரணாலயம்

தம்பா காட்டுயிர் சரணாலயம், அய்சால்

17

அய்சால் நகரத்திலிருந்து130 கி.மீ தூரத்தில் இந்த தம்பா காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. மிக அடர்த்தியான தாவரச்செழிப்பு நிரம்பியுள்ள இந்த சரணாலய வளாகம் 550 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படுகிற்து.

கோடைக்காலத்தில் இப்பகுதி இனிமையான குளுமையான சூழலுடன் காட்சியளிக்கிறது. 200 மீ முதல் 800 மீ வரை வெவ்வேறு உயரங்களில் இந்த சரணாலயப்பகுதி அமைந்திருக்கிறது. மலை சார்ந்த இயற்கைப்பசுமையை பார்த்து ரசிக்க இந்த சரணாலயம் மிகவும் ஏற்ற இடமாகும்.

பல்வேறு வகையான தாவரங்களும் உயிரினங்களும் இந்த தம்பா காட்டுயிர் சரணாலயத்தில் நிறைந்துள்ளன. டிப்டெரோகார்பஸ் டுர்பினாடஸ், டிப்டெரோகார்பஸ் மார்க்கோகார்பஸ், டெர்மினாலியா மைரியோகார்ப்பா, டொன்னா சிலியாட்டா, மிச்செலியா சம்பகா, அர்டொரோகார்ப்பஸ் சப்லாஷா ஸ்டெர்குலியா விலோசா மற்றும் பலவகையான ஆர்க்கிட் மற்றும் மூங்கில் வகைகள் இங்கு காணப்படுகின்றன.

இங்கு வசிக்கும் விலங்கினங்களில் புலி, ரீசஸ் குரங்கு, ராட்சத அணில், ஹிலாக் கிப்பன் குரங்கு, இலைக்குரங்கு, இந்திய யானை, ஹிமாலயக்கரடி, சிறுத்தை, குரைக்கும் மான், முள்ளம்பன்றி, காட்டெருமை, காட்டுப்பன்றி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவை தவிர ஊர்வன உயிரிகளான மலைப்பாம்பு, உடும்பு, மலை ஆமை மற்றும் ராஜநாகம் போன்றவையும் இங்கு வசிக்கின்றன.

அய்சால் நகரத்திலிருந்து டாக்சிகள் அல்லது சுற்றுலா வாகனங்கள் மூலம் இந்த தம்பா காட்டுயிர் சரணாலயத்திற்கு வரலாம். நவம்பர் முதல் மார்ச் வரையிலான பருவம் இங்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat