Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அய்சால் » ஈர்க்கும் இடங்கள் » ஹமூய்ஃபாங்

ஹமூய்ஃபாங், அய்சால்

17

ஹமூய்ஃபாங் எனும் இந்த சிகரம் மிசோரம் பகுதியின் மிக முக்கியமான சுற்றுலா அம்சமாக வீற்றிருக்கிறது. இந்த மலைப்பகுதி கன்னிமை மாறாத தூய்மையான காட்டுப்பகுதிகளால் நிரம்பியுள்ளது. மிசோ இன தலைவர்களில் கூர்மையான பாதுகாப்பில் இந்தப்பகுதி வெகுகாலமாக இருந்து வந்திருக்கிறது.

இந்த சிகரத்தின் உச்சியில் ஹமூய்ஃபாங் டூரிஸ்ட் ரிசார்ட் விடுதி அமைந்துள்ளது. இது மிசோரம் மாநில சுற்றுலாவளர்ச்சித்துறையின் மூலம் பராமரிக்கப்படுகிறது. இந்த விடுதியிலிருந்து பயணிகள் சுற்றிலும் பரவிக்கிடக்கும் அற்புதமான இயற்கை எழில் அம்சங்களை பார்த்து ரசிக்கலாம்.

உயர்ந்தோங்கி நிற்கும் சிகரங்கள் மற்றும் ஓவியங்கள் போன்ற மலைக்காட்சிகள் போன்றவற்றை இப்பகுதியிலிருந்து பார்த்து ரசிக்கும் அனுபவத்திற்கு ஈடு இணையில்லை.

சிகரத்தை ஒட்டியுள்ள புல்வெளிப்பகுதிகளில் பயணிகள் பிக்னிக் சிற்றுலா மேற்கொண்டு உற்சாகமாக பொழுதுபோக்கலாம். கூடாரத்தங்கல் போன்ற பொழுதுபோக்குகளுக்கும் இப்பகுதி ஏற்றது.

வருடந்தோறும் இந்த சிகரப்பகுதியில் அந்தூரியம் திருவிழா மற்றும் தல்ஃபாவாங் எனும் திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. சிகரத்தை ஒட்டி அமைந்திருக்கு பழமையான கிராமப்பகுதிகளுக்கும் சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்யலாம்.

ஹமூய்ஃபாங் மலைச்சிகரம் அய்சால் நகரத்திலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ளது. வாடகை வாகனங்கள் மூலம் பயணிகள் இந்த இடத்துக்கு வந்து சேரலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat