டம் டில், அய்சால்

டம் டில் ஏரி அல்லது  கடுகு ஏரி என்று அழைக்கப்படும் இந்த ஏரி மிசோரம் மாநில மீன் வளர்ச்சி துறையினால் மீன் வளர்ப்பிற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஏரிக்கும் அருகிலேயே ஒரு சுற்றுலா ரிசார்ட் விடுதியும் மிசோரம் மாநில சுற்றுலாத்துறையின் மூலம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஏரிப்பகுதியில் விதமான மரங்கள், தாவரங்கள் மற்றும் உயிரினங்களை சுற்றுலாப்பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.

இந்த ஏரியின் பின்னணியில் ஒரு உள்ளூர் கதை ஒன்றும் சொல்லப்பட்டு வருகிறது. அதாவது இந்த பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு தம்பதியர் வசித்த வந்ததாகவும், பின்னர் கணவனின் திடீர் மரணத்திற்குப்பிறகு மனைவியின் கனவில் வந்த அந்த கணவன் இந்த ஏரிப்பகுதியில் இருந்த கடுகுச்செடியை பாதுகாப்பாக வளர்த்து வருமாறு கூறியுள்ளான்.

அவ்வாறே அந்த மனைவி அந்த கடுகுச்செடியை கவனமாக பாதுகாத்து வளர்த்து வந்துள்ளார். இருப்பினும் அந்தப்பெண் மறுமணம் செய்துகொண்டபிறகு அவளது இரண்டாம் கணவன் இது போன்ற விஷயங்களை விரும்பவில்லை.

அவளது முதல் கணவனோடு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் அவன் அழிக்க விரும்பினான். எனவே அந்த கடுகுச்செடியை அவன் வேருடன் பிடுங்கியபோது அந்த பள்ளத்திலிருந்து வெளிப்பட்ட நீர் இந்த பள்ளத்தாக்கு முழுதும் நிரம்பி இந்த டம் டில் எனப்படும் ஏரியாக மாறியது என்று அந்த கதை கூறுகிறது.

அய்சால் நகரத்திலிருந்து 110 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரிப்பகுதிக்கு சுற்றுலா வாகனங்கள் மூலம் பயணிகள் சென்றடையலாம்.

Please Wait while comments are loading...