பீம் புர்ஜ் மற்றும் கர்பா குஞ்சன் என்றழைக்கப்படும் இந்த பிரசித்தமான சுற்றுலா அம்சங்கள் தாராகர் கோட்டை வளாகத்தினுள்ளேயே அமைந்துள்ளன. சுற்றளவின் அடிப்படையில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பீரங்கி என்று அழைக்கப்படும் கர்பா குஞ்சன் பீரங்கியானது அதற்கென பிரத்யேக அமைக்கப்பட்டுள்ள பீம் புர்ஜ் எனப்படும் கற்கோபுரத்தின் மீது நிறுத்தப்பட்டுள்ளது. இவற்றுக்கு அருகிலேயே வறட்சி காலத்தில் பயன்படுத்துவதற்கான நீரை சேகரித்து வைப்பதற்கான குளங்களும் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications