அலிபாக் என்ற தன் நகரத்தின் பெயரிலேயே அறியப்படும் இந்த கடற்கரையானது அலிபாக் செல்லும் பயணிகளின் முக்கிய விருப்ப ஸ்தலமாகும். இங்கிருந்து கொலாபா கோட்டையையும் நன்றாக பார்க்க முடியும்.
இங்குள்ள கடற்கரை மணல் நல்ல கருமை நிறத்தில் இருப்பது ஒரு சுவாரசியமான கண்களைக் கவரும் அம்சமாகும். எல்லா பீச்’களையும் போன்றே இங்கும் நிறைய உணவகங்கள் நிறைந்துள்ளன. பயணிகள் உள்ளூர் உணவு வகைகள் மற்றும் இளநீரை ருசித்தபடியே கடற்கரை அழகை மற்றும் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications