கானேஷ்வர் தேவஸ்தான் (கோயில்) ஒரு புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். அலிபாக்கிலிருந்து 12 கி.மீ தூரத்தில் 900 அடி உயரமுள்ள ஒரு மலைமீது இந்த கோயில் அமைந்துள்ளது.
பக்தர்களும் பயணிகளும் 500 படிகளைக்கொண்ட மலைஏற்றப் பாதையில் ஏறி இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரமிக்க வைக்கும் சிவன் விக்கிரகத்தைக் கொண்டிருக்கும் இந்தக் கோயில் ராம்தேவ் யாதவ் ராஜாவால் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோயிலின் வளாகம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஷீ ஹனுமான், ஷீ பல்ராம் கிருஷ்ணா மற்றும் ஷீ பாலேஷ்வர் போன்ற கடவுள்களுக்கும் சிறு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.
பீம் குண்டா எனும் நந்தவனமும் ஒரு நாகர் கானாவும் இந்த கோயிலில் உள்ளன. ஒவ்வொரு கார்த்திகை பௌர்ணமியின் போதும் இங்கு கோயில் திருவிழா நடத்தப்படுகிறது.
இந்த கோயிலில் உள்ள சிவன் விக்கிரகம் 54 அடி உயரம் உள்ளது என்பது விசேஷமான ஆச்சரியமான அம்சமாகும். அருகிலேயே கருங்கல்லால் கட்டப்பட்ட ஒரு இனிப்பு நீர் தடாகமும் உள்ளது.



Click it and Unblock the Notifications