அலிகார் நகரத்தின் மையத்தில் சிதைவுகளின் பிடியில் உள்ள இடம் தான் டோர் கோட்டை. 18-ம் நூற்றாண்டு வரையிலும் அலிகார் கோல் அல்லது கோய்ல் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
சில வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, 'கோல்' நகரம் உண்மையில் டோர் பழங்குடியினரால் உருவாக்கப்பட்டது எனவும் மற்றும் எனவே தான் இந்த கோட்டை புத்தசேன் டோர் என்ற அரசரின் பெயரைக் கொண்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.
அவருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற அனைத்து சட்ட பரிபாலனங்களும் இந்த கோட்டையில் தான் நடைபெற்றது.
பழங்காலத்தைச் சேர்ந்த மிகப்பெரிய, பிரமிக்க வைக்கும் கோட்டைகளில் ஒன்றாகவே டோர் கோட்டை கருதப்படுகிறது. கோல் பகுதிக்கு வந்த சில பயணிகளின் குறிப்புகளில் இந்த கோட்டையைப் பற்றிய செய்திகள் கிடைத்துள்ளன.
மிகவும் அசாதாரணமாக திட்டமிட்டு கட்டப்பட்டுள்ள இந்த கோட்டையில், வலிமையான கண்காணிப்பு கோபுரங்களும் உள்ளன. இந்த கோட்டைக்குள் ஒரு கிணறும், குதிரை லாயமும் உள்ளது.



Click it and Unblock the Notifications