ஆகாஸகங்கா அலாங்கில் உள்ள ஒரு புனிதமான இடம் ஆகும். இந்து மத புராணங்களின் படி இந்த இடத்தில் அன்னை பார்வதியின் துண்டிக்கப்பட்ட தலை விழுந்ததாக நம்பப்படுகிறது. ஆகவே இந்த இடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.
இங்கு வரும் பக்தர்கள் இங்குள்ள புனித நீர் குளத்தில் புனித நீராடுகின்றனர். இங்கே ஒரு புனித குண்டம் ஒன்றும் உள்ளது. மலைகளூக்கு கீழே பாய்ந்து ஓடும் அழகிய பிரம்மபுத்திரா நதியின் தோற்றத்தை நாம் இங்கிருந்து கண்டு மகிழலாம். இந்தப் புனித இடத்திற்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.



Click it and Unblock the Notifications