அல்வர் பிரதேசத்தின் வரலாற்றுப்பின்னணி பற்றிய முக்கியமான தரிசனங்களை இந்த அருங்காட்சியகம் பயணிகளுக்கு அளிக்கிறது. பனையோலைச்சுவடிகள் மற்றும் அரிய ஓவியங்களின் சேகரிப்புகளை இங்கு காணலாம்.
ராஜ வம்சத்தினர் பயன்படுத்திய புராதன ஆயுதங்கள், பெர்ஷிய மற்றும் சம்ஸ்கிருத நூற்பிரதிகள், இசைக்கருவிகள், பித்ரி வேலைப்பாடுகள், பதப்படுத்தப்பட்ட மிருக உருவங்கள், குறு ஓவியங்கள், மட்பாண்டங்கள் மற்றும் வெண்கல பொருட்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பிரம்மாண்ட அரும்பொருள் சேகரிப்பை பயணிகள் இங்கு கண்டு மகிழலாம். யானைத்தந்த வேலைப்பாடுகள் மற்றும் சாயம் பூசப்பட்ட சிலைகளும் இங்குள்ள முக்கிய அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.



Click it and Unblock the Notifications