இந்த மூஸி மஹாராணி கி சாத்ரி என்பது வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஒரு சமாதி மாடமாகும். இரண்டு அடுக்குகளைக் கொண்டுள்ள இந்த நினைவுச்சினம் வினய் சிங் என்பவரால் பக்தவார் மஹாராஜா மற்றும் அவரது ராணியார் மூஸி ஆகிய இருவரின் நினைவாக கட்டப்பட்டுள்ளது.
1815ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள இந்த நினைவுமாடம் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்துடன் காட்சியளிக்கிறது. சிவப்பு பாறைக்கற்களால் ஆன தூண்களின்மீது உருவாக்கப்பட்டிருக்கும் யானை உருவத்தினை ஒத்த கட்டமைப்பு கண்களைக் கவர்கிறது.
இதன் மேற்தளப்பகுதி பளிங்குக்கற்களால் உருவாக்கப்பட்டு வட்டமான கூரைப்பகுதி, தோரண அலங்கார வளைவுகள் போன்ற அற்புதமான கலையம்சளையும் கொண்டுள்ளது.
இந்த நினைவுச்சின்னத்தின் உட்பகுதி சிற்பவடிப்புகள் மற்றும் சுவரோவியங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்தலத்தில் சுற்றுலாப்பயணிகள் பல அழகிய வண்ணமயமான பறவைகளையும் சுற்றுப்புறத்தில் சுதந்திரமாக திரியும் மயில்களையும் பார்த்து ரசிக்கலாம்.
பின்னணியில் அழகிய ஆரவல்லி மலைகள், சுற்றிலும் பசுமையான சூழல் மற்றும் பலநிறங்களில் பூத்திருக்கும் மலர்கள் ஆகியவையும் இந்த ஸ்தலத்திற்கு அழகு சேர்க்கின்றன.



Click it and Unblock the Notifications