800 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள முண்டந்துறை களக்காடு புலிகள் காப்பகம், 1988-ல் தேசிய புலிகள் காப்பகம் என்ற அந்தஸ்தை பெற்றது. இது மேற்கு தொடர்ச்சி மலைகளின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது.
தெற்கு பகுதியில் அதிகம் காணப்படும் புலிகளை தவிர சிறுத்தைகள், நரிகள், கழுதைப் புலிகள், காட்டுப் பூனைகள், பலதரப்பட்ட குரங்குகள் மற்றும் மான்களையும் இங்கே காணலாம். ஊர்வன, நீர்நில உயிரினங்கள் மற்றும் பல பறவைகளும் இந்த சரணாலயத்தில் வாழ்கின்றன.
மிருகங்களைத் தவிர இந்த சரணாலயத்தில் ஈர்க்கப்படும் மற்றறொரு விஷயம் மலைகளில் மற்றும் காட்டுப் பாதையில் நடை பயணம் செய்ய 24 விதமான பாதைகள் உள்ளன. இந்த சரணாலயத்திற்கு வாரத்தில் 7 நாட்களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சென்று வரலாம்.



Click it and Unblock the Notifications