அம்பாதேவி கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அம்பாதேவி கோயில் அம்ராவதி நகரின் மையப்பகுதியில் காந்தி சதுக்கத்தில் உள்ளது. புரதானமான ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட இந்த கோயில் பல இதிகாச காவியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பீஷ்மகாவின் புதல்வியான ருக்மணிதேவியானவர் சிசுபாலருக்கும் தனக்கும் நடக்கவிருந்த திருமணத்திற்கு முதல் நாள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்ததாகவும் இங்கிருந்து ஷீ கிருஷ்ணர் ருக்மணியை கவர்ந்து சென்று திருமணம் செய்துகொண்டதாகவும் புராணிக கதைகள் கூறுகின்றன.
நவராத்திரி மற்றும் தசரா பண்டிகைக்காலங்களில் அம்பாதேவி கோயிலுக்கு நாடெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விஜயம் செய்கின்றனர். விழாக் கொண்டாட்டங்களுடன் ஒரு சந்தையும் கோயில் மைதானத்தில் நடத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications