கவில்கர் கோட்டை எனப்படும் இந்த கோட்டை 300 ஆண்டுகள் பழமையை உடையதாகும். சிக்கல்தராவுக்கு அருகில் அம்ராவதி பகுதியில் அமைந்துள்ள இந்த கவில்கர் கோட்டையானது பீராரின் பழைய தலைநகரான அச்சல்பூருக்கு வடக்கில் 30 கி.மீ தூரத்தில் 1103மீ உயரத்தில் காணப்படுகிறது.
கவாலிஸ் எனும் சொல்லிலிருந்து இந்த கோட்டையின் பெயர் பிறந்துள்ளது. அஹ்மத் ஷா வாலி இந்த கோட்டையை 1425ம் ஆண்டு கட்டியுள்ளார். பின்னாளில் ஃபதேஹ்-உல்லா-இமாத்-உல்-முல்க் என்பவரால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கவில்கர் கோட்டை இரண்டு பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது. வெளிக்கோட்டை பிரிவு உள் கோட்டையைவிட உயரம் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது. பதான் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள ஒரு மசூதியையும் இது கொண்டுள்ளது.
இங்குள்ள எட்டு பீரங்கிகளில் இரண்டு பீரங்கிகள் இன்னமும் இயங்கக்கூடிய நிலையில் காணப்படுகிறது. இந்த கோட்டை சுவரில் எருதுகள், சிங்கங்கள், யானைகள் மற்றும் புலிகள் ஆகியவற்றின் உருவங்களுடன், உருது, ஹிந்தி மற்றும் அரபிக் குறிப்புகளும் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications