Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» அஞ்சுனா பீச்

அஞ்சுனா பீச் - புத்துயிர் பெற்றிடுவோம்!

17

அஞ்சுனா பீச் புகழ்பெற்ற கேண்டலிம் கடற்கரையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் சாலை மார்க்கமாக எளிதாக அடைந்து விடலாம். இந்தக் கடற்கரைகளில் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப புதிய புதிய உணவு வகைகளை தினந்தோறும் பரிமாறும் ஹோட்டல்கள் உங்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையும் என்பது நிச்சயம். மேலும் இந்தக் கடற்கரையின் அமைதியை தேடி வரும் பயணிகளின் கூட்டமும் அதிகம்.

அஞ்சுனா பீச்சுக்கு வந்து விட்டு அங்குள்ள கர்லிஸ் உணவகங்களுக்கு செல்லாமல் திரும்புவது முற்றுப்பெறாத பயணமாகவே அமையும். இந்தக் கடற்கரையில், மதிய வேளைகளில் கடல் அலைகளை ரசித்துக் கொண்டே காக்டெயில்களை அருந்தும் அனுபவம் அலாதியானது.அதோடு இங்கு புத்தகம் படிப்பது, வாக்மேனில் பாடல்கள் கேட்பது, மடிக்கணினியில் ஃபேஸ்புக் பார்ப்பது போன்று உங்களுக்கு பிடித்தமான வேலைகளிலும் ஈடுபடலாம்.

அஞ்சுனா பீச் கோவாவின் மற்ற கடற்கரைகளை போல் அல்லாமல், ஆழமாகவும், செங்குத்தாகவும் சரிந்து காட்சி தரும். எனவே ஆபத்து நேரத்தில் உதவி செய்வதற்காக எப்போதும் கடற்கரையை சுற்றி ஆட்கள் காவலுக்கு நின்று கொண்டே இருப்பார்கள். எனினும் நீங்கள் கடலில் உங்கள் விருப்பப்படி நீந்தி மகிழலாம்.

அஞ்சுனா பீச்சின் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் பயணிகளிடையே மிகவும் பிரசித்தம். இங்கு லெதர் பைகள், காலணிகள் என்று உங்கள் விருப்பத்திற்கேற்ற பொருட்களை மலிவு விலைகளில் வாங்கலாம்.

மேலும், பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகள், அஞ்சுனா பீச்சிலிருந்து கல்லெறியும் தூரத்திலேயே அமைந்திருக்கின்றன. எனவே பாகா அல்லது கலங்கூட் கடற்கரைகளிலிருந்து வாடகை கார்களின் மூலம் சுலபமாக அஞ்சுனா பீச்சை அடைந்து விடலாம்.

அஞ்சுனா பீச் சிறப்பு

அஞ்சுனா பீச் வானிலை

சிறந்த காலநிலை அஞ்சுனா பீச்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது அஞ்சுனா பீச்

  • சாலை வழியாக
    கோவாவை மும்பையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 17 அல்லது மும்பை-கோவா நெடுஞ்சாலை மூலமாக அடையலாம். ஆனால் இந்த வழி உங்களை நீண்ட பயணத்துக்கு இட்டுச் செல்வதோடு, கொஞ்சம் ஆபத்தானதும் கூட. எனினும் மும்பையிலிருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் வழியை பயன்படுத்தி, சதாரா நெடுஞ்சாலையை அடைந்து, அதன் பின்னர் சாவந்த்வாடியை அடைந்து விடலாம். அப்படி சாவந்த்வாடியை நீங்கள் அடைந்து விட்டால் அங்கிருந்து கோவா வருவதற்கு ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும். மேலும் மும்பை, புனே மற்றும் மற்ற மகாராஷ்டிர நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் கோவாவுக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று அனைத்து பகுதிகளிலிருந்தும் கோவாவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் மும்பை மற்றும் கோவாவுக்கு இடையில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் பயணம் செய்வதற்கு பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு இரவு நேரத்தில் பயணம் செய்வது பலருக்கு சௌகரியமாக இருப்பதே காரணம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து தெற்கு கோவாவின் தபோலிம் விமான நிலையத்துக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும் கோவாவில் பன்னாட்டு விமான நிலையம் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு பயணிகள் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரங்களுக்கு வந்த பின்புதான் கோவாவை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue