தெற்கு கோவாவில் உள்ள கோல்வா சாலையில் அமைந்திருக்கும் சிறிய கடற்கரையான அரோசிம் பீச்சில் எண்ணற்ற நீர் விளையாட்டுகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இங்கு பாதுகாப்பு வசதிகள் குறைவாக இருக்குமாதலால் பயணிகள் கடலின் ஆழத்துக்கு செல்வது போன்ற துணிகர முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
இந்தக் கடற்கரையில் குடில்களை அவ்வளவாக பார்க்க முடியாது. இருப்பினும் பீச்சில் இருக்கக்கூடிய ஒரு சில குடில்களில் சுவையான கோவான் உணவு வகைகளை நீங்கள் ருசிக்கலாம். மேலும் கடற்கரையை ஒட்டி நிறைய 4 மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்கள் இருக்கின்றன.
கோவா விமான நிலையம் மற்றும் பனாஜி நகரிலிருந்து முறையே 22 மற்றும் 35 கிலோமீட்டர் தொலைவில் அரோசிம் பீச் அமைந்திருக்கிறது. எனவே வாடகை கார்கள் மூலம் அரோசிம் கடற்கரையை சுலபமாக அடைந்து விட முடியும்.
அதோடு அரோசிம் கடற்கரைக்கு அருகில் சில ரயில் நிலையங்கள் இருக்கின்றன. மேலும், பைக்கை வேண்டுமானாலும் ஒருவர் வாடைகைக்கு எடுத்துக் கொண்டு அரோசிம் கடற்கரைக்கு செல்லலாம்.



Click it and Unblock the Notifications