Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஔரங்காபாத் » ஈர்க்கும் இடங்கள் » பர்வார் மியூசியம்

பர்வார் மியூசியம், ஔரங்காபாத்

30

ஔரங்காபாதில் உள்ள பர்வார் மியூசியம் பிரபலமான மியூசியம் ஆகும். சராபா சாலையில் ஒரு பழமையான ஹவேலியில் பர்வார் என்ற  ஓய்வு பெற்ற மருத்துவரால் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

அவரது தனிப்பட்ட அபூர்வமான சேகரிப்புகள் பல இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆயினும் இந்த சேகரிப்புகள் பெரும்பாலும் அவுரங்காபாத் மற்றும் இப்பிரதேசம் சார்ந்த வரலாற்று பின்னணி கொண்ட சேகரிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவற்றுள் 500 வருடத்துக்கு முந்தைய இரும்பு சங்கிலியால் ஆன கவச உடை, மன்னர் ஔரங்கசீப்பின் கையால் எழுதப்பட்ட குரான் மற்றும் 800 வருடத்துக்கு முந்தைய பைதானி புடவை போன்றவையும் அடங்கும்.நாம் காண்பது நிஜம்தானா என்று வியக்க வைக்கும் அளவுக்கு அதிசயமான புராதன பொருட்கள் இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இது காலை 10.30 மணியிலிருந்து 1.30 வரையிலும் பின்னர் 3.00 மணியிலிருந்து 6.00 மணி வரைக்கும் பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கப்படுகிறது. நுழைவுக்கட்டணமாக ரூ 5 பார்வையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed