Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாதாமி » ஈர்க்கும் இடங்கள் » பனஷங்கரி கோயில்

பனஷங்கரி கோயில், பாதாமி

47

கல்யாணச்சாளுக்கியர்களால் 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த பனஷங்கரி கோயில் படாமிக்கு அருகில் உள்ளது. ஸ்கந்த புராணம் மற்றும் பத்மபுராணத்தின்படி இந்த கோயிலுள்ள தெய்வம் சாளுக்கியர்களின் குலதெய்வமான பார்வதிதேவியின் அவதாரமான பனஷங்கரி எனும் தேவிக்கடவுள் ஆகும். இது துர்காமாசுரன் எனும் அசுரனை அழித்த தேவி அவதாரமாக சொல்லப்படுகிறது.

 

இந்தக்கோயிலின் விக்கிரகம் கருங்கல்லால் ஆனதாக ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்த நிலையில் காலடியில் நசுக்கப்பட்ட அசுரனின் தலையோடு காட்சியளிக்கின்றது. மேலும் தேவியின் எட்டுக் கரங்களில் திரிசூலம், கண்டம், கமலப்பாத்திரம், உடுக்கு, வேதச்சுவடி போன்றவை ஏந்தப்பட்டுள்ளன.

இந்த பனஷங்கரி கோயிலானது ஆதியில் 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும் 17ம் நூற்றாண்டில் பரசுராம் அகலே எனும் மராத்திய தளபதியால் இது மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கோயில் திராவிட சிற்பக்கலை அம்சங்களைக்கொண்டுள்ளது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பயணிகள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்தால் அச்சமயம் கோலாகலமாக நடத்தப்படும் தேர்த்திருவிழாவை பார்த்து ரசிக்கலாம்.

திலக்கராண்ய வனப்பகுதியில் அமைந்துள்ள இந்தக்கோயில் ‘வனதேவி’ எனும் பொருள் தரும்படியாக பனஷங்கரி எனும் பெயரைப்பெற்றுள்ளது. (பன் = காடு; ஷங்கரி=சிவனின் மனைவி)

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed