பாதாமிக்கு வருகை தரும் பயணிகள் நேரம் இருப்பின் இந்த தத்தாத்ரேய கோயிலையும் சென்று பார்ப்பது அவசியம். 12ம் நூற்றாண்டைச்சேர்ந்த இந்தக் கோயில் தார்வாட் பகுதியில் காந்தி சௌக் எனுமிடத்தில் உள்ளது.
தட்டன கிடு என்றும் அறியப்படும் இந்தக்கோயில் தத்தாத்ரேய கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கடவுள் மூன்று தலைகளுடன் காட்சியளிக்கின்றார்.பிரம்மா, விஷ்ணு, மஹேஷ்வர் என்ற மும்மூர்த்திகள் சேர்ந்த ஒற்றை அவதாரமே இந்த தத்தாத்ரேயர் என்பது ஐதீகமாகும்.
இந்தக்கோயில் அதன் சாளுக்கிய கட்டிடக்கலை அம்சத்துக்காக கீர்த்தி பெற்றுள்ளது. இதன் கட்டுமான கலையம்சத்துக்காக இப்பிரதேசத்தில் உள்ள சிறந்த கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications