டிட்டோஸ் சாலையில் அமைந்திருக்கும் இசைக்காக புகழ்பெற்ற விடுதிகளில் கிளப் ஐவிக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அதிலும் டி.ஜே பியரி போன்ற பிரபலமான டி.ஜேக்களை நீங்கள் கிளப் ஐவியை தவிர டிட்டோஸ் சாலையிலுள்ள வேறெந்த இரவு விடுதியிலும் காண முடியாது. மேலும், இந்த விடுதியின் வடிவமைப்பும், இலவச நுழைவுக் கட்டணமும் ஏராளமான பயணிகளை இங்கு அழைத்து வருகின்றன.
பாகா கடற்கரையில் உள்ள இரவு விடுதிகளில் கிளப் ஐவி மட்டுமே வாரத்தின் எந்த நாட்களிலும் பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் வாங்குவதில்லை. இந்த விடுதியின் வெளிப்புற காக்டெயில் பாரில் நீலவானத்தை ரசித்துக் கொண்டே மது அருந்தும் அனுபவம் அலாதியானது.
அதன் காரணமாகவே இந்த விடுதி திறக்கப்படும் நேரமான இரவு 8 மணி எப்போது வரும் என்றும் அனைவரும் ஆவலாக காத்திருப்பார்கள். மேலும் டி.ஜே.பியரியின் அற்புதமான இசைத்தட்டுகளும், பெரிய திரையில் காண்பிக்கப்படும் கிரிக்கெட்டும், பார்முலா ஒன்னும் பயணிகளை குஷிப்படுத்தும் அம்சங்கள்.
இது தவிர கிளப் ஐவிக்கு வெகு அருகில், கஃபே காஃபி டேவுக்கு பின் பக்கம் அமைந்திருக்கும் தந்தூரி ஜாயின்ட் உணவுப் பிரியர்களுக்கு விருந்து படைக்கும் இடமாக இருக்கும்.
கிளப் ஐவி டிட்டோஸ் சாலையின் வாயிலிலேயே அமைந்திருப்பதால் இந்த விடுதியை அடைவதும், வந்த பிறகு கார் பார்க்கிங் செய்வதும் கடினமான காரியமாக இருக்காது.



Click it and Unblock the Notifications