க்ஹுஜென்பாலியில் அமைந்துள்ள இந்த ஆனந்த் நிகேதன் க்ஹுஜென்பாலி ஆசிரமம் எனவும் அழைக்கப்படுகின்றது. இது பாலங்கிரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஆசிரமம் 1985 ம் ஆண்டு பரமஹம்ச சுவாமி சத்யப்ரஜாநந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது. இந்த ஆசிரமம் சுமார் 40 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது.
பச்சை காடுகளால் சூழப்பட்டுள்ள இந்த ஆசிரம வளாகத்தில் விஸ்வத்தம வித்யாமந்திர் பள்ளி, அஷுதோஷ் பீத், சாதனா கேத்ர, பூஜா மண்டபம், யோகா மையம், ப்ரஜ்ஞா குடிர், ஸந்த் நிவாஸ், மற்றும் பல்வேறு தோட்டங்கள் உள்ளன.
ஆண்டுதோறும் ஆயிரமாயிரம் SOF பார்வையாளர்கள் மன அமைதி வேண்டியும் தெய்வீகத்தன்மையுடன் உறவாடவும் உலகெங்கிலும் இருந்து இந்த ஆசிரமத்திற்கு வருகை புரிகின்றனர்.
மேலும் இங்கு வரும் பார்வையாளர்களுக்கு யோகா கற்று கற்று கொடுக்கப்படுகின்றது. இந்த ஆசிரமத்தில் நவராத்திரி, குரு பூர்ணிமா, சிவ ராத்ரி போன்ற பல விழாக்கள் வெகு விமர்சையாயக் கொண்டாடப்படுகின்றன. இந்த ஆசிரமத்திற்கான உங்களுடைய வருகை மிகவும் உபயோகமானது.



Click it and Unblock the Notifications