பந்திப்பூர் அமைந்துள்ள இந்த பந்திபூர் தேசிய வனவிலங்கு பூங்கா சாகச விரும்பிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற ஸ்தலமாகும். 800 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த பந்திபூர் வனப்பகுதி செழிப்பான, அடர்த்தியான, நீண்ட காடுகளைக்கொண்டுள்ளது.
1931ம் ஆண்டு முதன் முதலில் மைசூர் மஹாராஜாவால் இந்த வனப்பகுதி 90 ச.கி.மீ பரப்பளவு கொண்ட வனவிலங்கு பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 1941 ம் ஆண்டில் இங்குள்ள உள்ளூர் தெய்வமான வேணுகோபாலஸ்வாமியை குறிப்பிடும் விதத்தில் வேணுகோபாலா வனவிலங்கு பூங்கா என்றும் மறுபெயரிடப்பட்டது.
நாகூர், கபினி மற்றும் மோயார் போன்ற ஆறுகளால் சூழப்பட்டிருக்கும் இந்த வனவிலங்கு பூங்காவின் எல்லா மூலைகளிலிருந்தும் பயணிகள் உட்சென்று பார்த்து ரசிக்கலாம்.
இந்த வனவிலங்கு பூங்காவில் புலிகள், நான்கு கொம்பு மான், ராட்சத அணில், யானை, அரிவாள் மூக்கன், காட்டுப்பன்றி, சிறுத்தை, கரடி மற்றும் காட்டெருமை போன்ற விலங்குகள் வசிக்கின்றன.
இவை தவிர சில அரிய புகலிடப்பறவைகள் மற்றும் காட்டுப்பறவைகளும் இங்கு காணப்படுகின்றன. பழுப்பு மூக்கு ஆந்தை, தூக்கணாங்குருவி, மரங்கொத்தி, மீன் கொத்தி போன்றவற்றுடன் பலவகைக்குருவிகள் மற்றும் பூச்சிப்பிடிப்பான் பறவைகளும் இங்கு நிறைந்துள்ளன.
மேலும் பண்டிபூர் தேசிய வனவிலங்கு பூங்கா பலவிதமான அரிய தாவர இனங்களையும் கொண்டுள்ளது. இவற்றில் தேக்கு, நெல்லி, மூங்கில், கருங்காலி, சந்தனமரம், நாவல் மரம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
சுற்றுலாப்பயணிகள் காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இந்த வனவிலங்கு பூங்காவுக்குள் விஜயம் செய்யலாம். நுழைவுக்கட்டணமாக இந்தியப்பயணிகளுக்கு 10 ரூபாயும் வெளிநாட்டுப்பயணிகளுக்கு 150 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications