சித்தாவூர் எனும் இந்த வரலாற்று நகரம் இங்குள்ள சித்தேஷ்வர் மஹாதேவ் கோயிலுக்காக புகழ் பெற்றுள்ளது. ஒரு பிரம்மாண்ட திருவிழா இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் சிவராத்திரித்திருநாளின்போது நடத்தப்படுகிறது.
ஏராளமான பக்தர்கள் அச்சமயம் இக்கோயிலில் வணங்குவதற்காகவும் பலிகாணிக்கை தரவும் திரள்கின்றனர். அச்சமயம் ஏராளமான சந்தைக்கடைகளும் இங்கு திறக்கப்படுகின்றன. இதே இடத்தில் அமைந்துள்ள காஜி குதுப் எனும் சூஃபி ஞானியின் சமாதியை தரிசிக்கவும் அதிக பக்தர்கள் வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications