கேரளாவின் புகழ்பெற்ற புனித ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் அனந்தபுரா கோயில், அனந்த பத்பநாப சுவாமியின் மூலஸ்தானமாக கருதப்படுகிறது. இந்தக் கோயிலின் ஏரியில் உள்ள முதலை கோயிலின் பாதுகாவலாக கருதப்படுவதோடு, பக்தர்களால் மிகவும் மரியாதைக்குரிய பிராணியாகவும் மதிக்கப்படுகிறது. அதோடு இந்த முதலை இறந்து போனாலும், அதன் இடத்தில் கோயிலை பாதுகாக்க மற்றொரு முதலை இந்த ஏரிக்கு வரும் என்றும் நம்பப்படுகிறது.
பேக்கல் நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் அனந்தபுரா கோயில் 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதோடு பிராதான கோயிலை சுற்றி தலைவாயில் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications