பேக்கல் பீச், பேக்கல்

பேக்கல் நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது கண்டிப்பாக பேக்கல் பீச்சுக்கு சென்று வர வேண்டும். இங்கு நீங்கள் அமைதியான காயல் நீர்ப்பரப்பில் நீந்தித் திளைக்கலாம், வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மரங்களின் நிழல்களில் சிறு உலா செல்லலாம், அதோடு குன்றுகளின் மீது ஏறி விளையாடி சாகசத்தின் சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை சுகிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் பேக்கல் கடற்கரையிலிருந்து சூரிய அஸ்த்தமனத்தை பார்த்து ரசிக்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. மேலும் பேக்கல் கடற்கரைக்கு வெகு அருகில் உள்ள கோட்டை ஒன்றில் திரைப்படங்கள் அதிகமாக படம் பிடிக்கப்பட்டு வருகின்றன. இது தவிர நேரமிருந்தால் கடற்கரைக்கு அருகாமையில் அமைந்திருக்கும் சிறிய மீனவ கிராமத்துக்கும் நீங்கள் சென்று வரலாம்.

Please Wait while comments are loading...